search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் கைது"

    • விமானம் நடுவானில் பறந்த போது சுகுமாரன் விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்தார்.
    • விமானம் கொச்சியில் தரைஇறங்கியதும் சுகுமாரன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    நடுவானில் விமானத்தில் சகபயணி மீது சிறுநீர் கழித்தது, விமானத்தில் பெண் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு அவர்களை தாக்கியது என அடிக்கடி சர்ச்சைகள் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கொச்சி வந்த ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்த முதியவர் ஒருவரும் இப்போது சர்ச்சையில் சிக்கி கைதாகி உள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    திருச்சூரை சேர்ந்த சுகுமாரன் (வயது 62) என்ற பயணி கொச்சிக்கு விமானத்தில் வந்தார். விமானம் நடுவானில் பறந்த போது அவர் விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்தார்.

    இதுபற்றி விமான ஊழியர்கள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானம் கொச்சியில் தரைஇறங்கியதும் சுகுமாரன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சுகுமாரன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேக்கூர் மாரியம்மன் கோவில் எதிரில் முதியவர் ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து பூ மாணிக்கத்தை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள மேக்கூர் பகுதியில் கேரள லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு சென்று பார்த்தபோது மேக்கூர் மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள மரத்தினடியில் முதியவர் ஒருவர் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரியை விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பூமாணிக்கம் (67) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து பூ மாணிக்கத்தை கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 12 கேரள மாநில லாட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.

    • 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சவரிமுத்து(வயது 78).

    இவர் சம்பவத்தன்று 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து சிறுமியை மீட்டுள்ளனர்.

    இதுகுறித்து சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சவரி முத்துவை கைது செய்தார்.

    • வாகன சோதனையில் 4 கிலோ கஞ்சா சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு நாட்டறம்பள்ளி வழியாகசெல்லும் பஸ்சில் கஞ்சா கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆந்திர- தமிழக எல்லையான கொத்தூர் பகுதியில் வாகன சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில அரசு பஸ்சை நிறுத்தி அதில் பயணம் செய்த முதியவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் அவர் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து விசாரணை செய்ததில் அவர் நாட் டறம்பள்ளி அருகே உள்ள பச்சூர் மடப்பள்ளம் பகுதியை சேர்ந்த கோபால் (வயது 60) என தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது சத்தியமங்கலம் வரதம்பாளையம் அருகே உள்ள தியேட்டர் பக்கத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த பெட்டிக்கடை யை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அந்த பெட்டி கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.

    இது குறித்து விசாரித்த போது சத்தியமங்கலம் பண்ணாரி யம்மன் நகரை சேர்ந்த ரங்கசாமி (75) என்பவர் அந்த பெட்டி க்கடை யை நடத்தி வந்தது தெரிய வந்தது.

    10 லாட்டரி சீட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரங்கசாமி இடமிருந்து ரூ.17, 950 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.

    • பெரும்பள்ளம் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதனையடுத்து போலீசார் ராமசாமி மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் நரசாபரம் பெரும்பள்ளம் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கே அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (62) என்பவரது சாலை வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் பாலிதீன் கவரில் 100-கிராம் கஞ்சா இருந்ததை போலீசார் கைப்பற்றினர்.

    போலீசார் விசாரணையில் ராமசாமி கர்நாடக மாநிலம் ஊகியத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், தனது பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள கஞ்சாவை விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் ராமசாமி மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • அரசு பஸ் டிரைவரை தாக்கிய முதியவர் கைது
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த தொண்டமான் நத்தம் கிராமத்திலி ருந்து ஆற்காட்டிற்கு அரசு பஸ் சென்றது.

    இந்த பஸ்சை அம்மூரைச் சேர்ந்த பாபு (வயது 43) ஓட்டிச்சென்றார். கேசவன்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே தொண்டமாநத்தத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் பஸ்சுக்கு முன்னால், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டிரைவர் பாபு விடம் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் அடித்து, பீர் பாட்டிலால் தாக்க முயற்சித்துள்ளார்.

    இதை பாபு தடுத்ததால் பீர் பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. பின்னர் அவர் பஸ்சில் ஏறி வயரை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து டிரைவர் பாபு, சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.

    • போலீசார் கோபிசெட்டி பாளையம் கச்சேரி மேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
    • அந்த கடையில் பரமசிவம் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் கோபிசெட்டி பாளையம் கச்சேரி மேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த கடையில் பரமசிவம் (68) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை ெபாருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கடையில் இருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளர் பரமசிவத்தை கைது செய்தார்.

    • 13 பவுன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • கொள்ளையனை கோவை காரமடை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    கோவை,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை மாரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் உள்ள வைர நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி சாந்தாமணி (43). இவர் காரமடை பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்து வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவரின் கடையின் பூட்டு உடைத்து மர்ம நபர்கள் கடையில் இருந்த 13 பவுன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து சாந்தாமணி காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 3 தனிப்படை அமைத்து கடை மற்றும் அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த காட்சியை வைத்து கொள்ளையனை தேடி வந்தனர்.

    அப்போது கொள்ளையன் கேரளாவில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா மாநிலம் கண்ணூர் விரைந்தனர். அங்கு போலீசார் முகாமிட்டு கொள்ளையனை தேடி நெல்லிகுந்து என்ற இடத்துக்கு சென்றனர். அங்கு கொள்ளையன் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தார்.

    உடனே போலீசார் கொள்ளையனை மடக்கி பிடித்தனர். பின்னர் கொள்ளையனை கோவை காரமடை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையன் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நெல்லிகுந்து பகுதியை சேர்ந்த தங்கச்சி மாருதி (52) என்பது தெரியவந்தது.

    அவரிடம் இருந்து வெள்ளி பொருட்கள் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் தங்கச்சி மாருதியை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சில்மிஷம் செய்ததார்.
    • போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 75) இவர் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சில்மிஷம் செய்ததார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து எலவனுசூர் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் எலவனாசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எதுவும் அறியாத சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரான கண்ணனை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

    • ஆலங்குடி நாதன் நகரை சேர்ந்த சந்துரு (வயது 52) என்பவர் திருவரங்குளம் மாரியம்மன் கோவில் முன்பு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
    • அவரிடம் இருந்து மூன்று நம்பர் சீட்டு கட்டுகள் மற்றும் 2,020 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை ;

    ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் பகுதியில் தனிப்படை உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது ஆலங்குடி நாதன் நகரை சேர்ந்த சந்துரு (வயது 52) என்பவர் திருவரங்குளம் மாரியம்மன் கோவில் முன்பு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மூன்று நம்பர் சீட்டு கட்டுகள் மற்றும் 2,020 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் சந்துருவை தனிப்படை போலீசார் ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அவல்பூந்துறை-வெள்ளோடு ரோட்டில் முதியவர் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மொடக்குறிச்சி:

    ஈேராடு மாவட்டம் சிவகிரி பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அவல்பூந்துறை-வெள்ளோடு ரோட்டில்  முதியவர் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அவல்பூந்துறை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த திருஞான சம்பத் (52) எனவும் அவர் அனுமதியின்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×